/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் வரும் 15ம் தேதி நடக்கிறது
/
மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் வரும் 15ம் தேதி நடக்கிறது
மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் வரும் 15ம் தேதி நடக்கிறது
மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் வரும் 15ம் தேதி நடக்கிறது
ADDED : நவ 11, 2025 11:22 PM
திருப்பூர்: திருப்பூரில், சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும், 15ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 72வது சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கபடி அலுவலக மைதானத்தில் நடக்கிறது. சாம்பியன்ஷிப் கபடி போட்டியில், திருப்பூர் மாவட்ட ஆண்கள் அணி தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள சீனியர் ஆண்கள் பங்கேற்கலாம்.
மேலும், தேர்வு போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. 85 கிலோவுக்குள் இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் விளையாட அனுமதி வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் காலை, மதியம் உணவு வழங்கப்படும். போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படும். தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், திருப்பூர் மாவட்ட அணிக்காக பயிற்சி முகாம் நடத்தி, மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு, மாவட்ட கபடி சார்பில், அழைத்து செல்லப்படுவர். மாநில போட்டி, கிருஷ்ணகிரியில், வரும் 18 ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடக்கிறது.
எனவே, திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரி, பொது ஆண்கள் அணி, ஆண்கள் அணிகள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு, 25 ஆயிரம் ரூபாய், கோப்பை, இரண்டாம் பரிசு, 15 ஆயிரம் ரூபாய், கோப்பை மற்றும் மூன்றாம் பரிசு தலா, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை (இரு அணிகளுக்கு) வழங்கப்படும், என மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தெரிவித்துள்ளார்.

