நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்குறள் திருப்பணித்திட்டம் சார்பில், எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வரவேற்றார். கல்லுாரி பேராசிரியர்கள் மலர், இந்திரா, திவ்யா, ஆகியோர் திருக்குறள் சார்ந்த கருத்துகளை, வாசிப்பு அனுபவம் குறித்து பேசினர். கவிஞர்கள் மைதிலி, ஆலம்பாபா, கணபதி குணசேகரன் ஆகியோர் திருக்குறள் வாசிப்பு உணர்வு பற்றி பேசினர். யுவராஜ் சம்பத், பாசிதாபானு மற்றும் சாந்தி சிறப்பு 'திருக்குறள் இன்பம்' என்ற தலைப்பில் பேசினர்.

