/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி: மாநில போட்டிக்கு அணிகள் தேர்வு
/
மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி: மாநில போட்டிக்கு அணிகள் தேர்வு
மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி: மாநில போட்டிக்கு அணிகள் தேர்வு
மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி: மாநில போட்டிக்கு அணிகள் தேர்வு
ADDED : அக் 21, 2024 11:31 PM
உடுமலை : பள்ளிகல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி உடுமலையில் மூன்று நாட்கள் நடந்தது.
திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி, உடுமலை நேதாஜி மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இரண்டாம் நாள் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாபு, மூன்றாம் நாள் மூத்த ஹாக்கி விளையாட்டு வீரர் மனோகரன் போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் முன்னிலை வகித்தார் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் - சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
ஜூனியர் பிரிவு, மாணவியருக்கான போட்டியில், காங்கேயம் ஜெய்சீஸ் மெட்ரிக் பள்ளி முதலிடத்திலும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.
சீனியர் பிரிவு மாணவியருக்கான போட்டியில், உடுமலை லுார்து மாதா மெட்ரிக் பள்ளி முதலிடத்திலும், திருப்பூர் செஞ்சுரி பவுன்டேசன் பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றன.
சூப்பர் சீனியர் பிரிவு மாணவியருக்கான போட்டியில், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், மூலனுார் பாரதி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.
மாணவர் பிரிவு
தொடர்ந்து ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி அணி முதலிடத்திலும், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.
சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மூலனுார் பாரதி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
சீனியர் பிரிவு மாணவர்களுக்கான போட்டியில், ஜெய்சாரதா பள்ளி அணி முதலிடமும், மூலனுார் பாரதி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
முதலிடம் பெற்ற அணிகள், மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.