ADDED : ஜன 07, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; மேல்நிலை வகுப்பு மாணவர்களிடம் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் மேம்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டி, வரும் 21, 22 உள்ளிட்ட இரண்டு நாட்களில் திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கல்லுாரியில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு, 21ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கு, 22ம் தேதியும் போட்டிகள் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லுாரிகளிலிருந்து, ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் தலா மூன்று பேர் பங்கேற்கலாம்.
போட்டிக்கான இறுதி பட்டியல் ஜன., 16ம்தேதி அனுப்பப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லுாரிகளின் வாயிலாக விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

