ADDED : செப் 24, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஜே.சி.ஐ. திருப்பூர் மெட்ரோவின் மூன்றாம் ஆண்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி திருப்பூர் தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரியில் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. நிர்வாகி பிரேம் சரண் மதிவாணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முக்கிய விருந்தினர்களாக ஜே.சி.ஐ. ஹரி, தீரன் சின்னமலை கல்லுாரி துணைத்தலைவர் முருகசாமி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். ஜே.சி.ஐ. திருப்பூர் மெட்ரோ தலைவர் தனேந்தர் தலைமை வகித்தார். செயலாளர் அசோக், திட்ட இயக்குநர் சிவசுந்தர், மனுராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
போட்டியில் பரிசு பெற்ற அனைவருக்கும் பதக்கம், கோப்பை வழங்கப்பட்டன. கலந்துகொண்ட அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.