/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அறிவியல் கண்காட்சிகுமுதா பள்ளி மாணவர் அசத்தல்
/
மாவட்ட அறிவியல் கண்காட்சிகுமுதா பள்ளி மாணவர் அசத்தல்
மாவட்ட அறிவியல் கண்காட்சிகுமுதா பள்ளி மாணவர் அசத்தல்
மாவட்ட அறிவியல் கண்காட்சிகுமுதா பள்ளி மாணவர் அசத்தல்
ADDED : ஜன 12, 2025 02:18 AM

திருப்பூர்: தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி, மாவட்ட அளவில் ஈங்கூர் ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் நடைபெற்றது. இதில், குமுதா பள்ளியின், 8ம் வகுப்பு மாணவர்கள் ரஷிக் ஆர்யா, முகில் ஆகியோர், 'நவீன அறிவியல் கருவிகளின் பயன்பாடு' என்ற படைப்பிற்காக மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலாளர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலரும் பாராட்டினர்.