/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட நீச்சல் போட்டி; மாணவர்கள் 'பாய்ச்சல்'
/
மாவட்ட நீச்சல் போட்டி; மாணவர்கள் 'பாய்ச்சல்'
ADDED : டிச 05, 2024 06:19 AM

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை, திருப்பூர் மாவட்டம் சார்பில், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, பூலுவப்பட்டி, ஏ.பி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 'பேக் ஸ்டோக்', 'பிரெண்ட் ஸ்டோக்', 'பட்டர்பிளே ஸ்டோக்' 100 மீ., 200 மீ., ஆகிய பிரிவுகளில் 'நாக்-அவுட்' முறையில் நீச்சல் போட்டிகள் நடந்தது.
பதிநான்கு வயது பிரிவில், 52 மாணவர், 36 மாணவியர், 17 வயது பிரிவில், 84 மாணவர், 22 மாணவியர், 19 வயது பிரிவில், 43 மாணவர், 28 மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக போட்டிகளை ஏ.பி.எஸ்., பள்ளி தாளாளர் சரவணக்குமார் துவக்கி வைத்தார் பள்ளி முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார். நீச்சல் போட்டிகளை முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்அதிபன் ஒருங்கிணைந்து நடத்தினர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, பாலகிருஷ்ணன், திலகவதி, ஜெயகண்ணன், கேத்ரின் பணிபுரிந்தனர்.