/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடையூறான பெட்டி, மின் கம்பம் அகற்றம்
/
இடையூறான பெட்டி, மின் கம்பம் அகற்றம்
ADDED : நவ 23, 2024 05:47 AM
திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பு பஸ் ஸ்டாப் அருகே அரசு போக்குவரத்து கழக, டைமிங் ஆபீஸ் பயன்பாட்டுக்கு ஒரு பெட்டி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் பெட்டி அகற்றப்படாமல் அவதி நிலவியது. இதனை போக்குவரத்து போலீசார் நேற்று அகற்றினர். இதனால், பயணிகளுக்கு சற்று இட வசதி கிடைத்துள்ளது.
அதே பகுதியில், அவிநாசி ரோட்டையும், பி.என்., ரோட்டையும் இணைக்கும் வகையில், சரவணா வீதியில், மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதையும் போலீசார் அகற்றினர். மேலும், இந்த ரோட்டில் இலகு ரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெருக்கடி நிலவியது. இதற்கு தீர்வு காணும் வகையில், இங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, இரு சக்கர வாகனங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையிலும், மாற்றம் செய்யப்பட்டது.
போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

