/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை; ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
/
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை; ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை; ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை; ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2025 11:02 PM

உடுமலை; உடுமலை அருகே, ஓடை மற்றும் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை, பெரிய பட்டியில், உப்பாறு ஓடை மற்றும் அரசுக்கு சொந்தமான வண்டிப் பாதையை ஆக்கிரமித்து தாய் கோழி பண்ணை அமைத்து வருகிறார்கள்.
அதே போல், குப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள முட்டைகோழிப்பண்ணையால், ஈ தொல்லை, துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி, விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
முத்தரப்பு பேச்சு நடத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் தீர்வு காணப்படாததால், நேற்று உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, கோட்டாட்சியர் குமார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நாளை (இன்று) மீண்டும், அளவீடு பணி மேற்கொள்ளப்படும்; அரசு நிலங்களுக்கான குறியீடு மற்றும் கற்கள் நடடப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டதோடு, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்திலேயே போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.