/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி போனஸ் சுமூகம்; 'சைமா' எதிர்பார்ப்பு
/
தீபாவளி போனஸ் சுமூகம்; 'சைமா' எதிர்பார்ப்பு
ADDED : அக் 14, 2024 11:52 PM
திருப்பூர், : தீபாவளி போனஸ் குறித்த எதிர்பார்ப்பு, ஒவ் வொரு பின்னலாடை தொழிலாளரிடமும் அதிகரித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலின் தாய் சங்கமான 'சைமா', தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென, தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
'சைமா' தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, பனியன் தொழிலாளருக்கு விரைவாக போனஸ் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்தந்த நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில்கொண்டு, தங்கள் தொழிலாளர்களுடன் சுமூகமாக பேசி, போனஸ் வழங்க வேண்டும். கடந்த காலங்களை போல, போனஸ் வழங்குவது குறித்து எவ்வித பிரச்னைகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, ஈஸ்வரன் கூறியுள்ளார்.