/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது: அவிநாசியில் கண்காணிப்பு தீவிரம்
/
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது: அவிநாசியில் கண்காணிப்பு தீவிரம்
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது: அவிநாசியில் கண்காணிப்பு தீவிரம்
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது: அவிநாசியில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : அக் 03, 2025 10:52 PM

அவிநாசி:
வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், லிங்கேஸ்வரர் கோவில் அருகே சேவூர் ரோடு சந்திப்பு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதி சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து 'சிசிடிவி' கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணிக்கும் பணியில் அவிநாசி போலீசார் ஈடுபட உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை, பட்டாசுகள், பலகாரங்கள் வாங்க கடைவீதிகளில் உள்ள துணிக்கடைகள் மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் அதிகளவில் கூடுவர்.
இதுதவிர, பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தீபாவளி விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு செல்ல அவிநாசி நகருக்குள் வந்து செல்வர்.
ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், நகை, பணம், மொபைல்போன் திருட்டு நடக்காமல் கண்காணிக்க வசதியாக, மூங்கில்களால் கோபுரம் அமைக்கப்பட்டு, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக, அவிநாசி போலீசார் தெரிவித்தனர்.