/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகர்கள் வழங்கிய தீபாவளி பரிசு
/
வணிகர்கள் வழங்கிய தீபாவளி பரிசு
ADDED : அக் 18, 2025 11:29 PM

பல்லடம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கு, பல்லடம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு, ஆண்டுதோறும் தீபாவளி பரிசுகள் வழங்கி வருகிறது. நடப்பாண்டு, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, என்.ஜி.ஆர். ரோட்டில் நேற்று நடந்தது. பேரமைப்பின் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு, புத்தாடை, இனிப்பு, காரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. பரிசுகளை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள், மகிழ்ச்சியுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.