/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்
/
ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்
ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்
ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்
ADDED : அக் 18, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: நாளை தீபாவளி பண்டிகை, இன்று விற்பனை மந்தமாகும் என்பதால், ஒரு நாள் முன்பாக நேற்றே, இறைச்சிக் கடைக்காரர்கள் பலர் விற்பனையை துவக்கினர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் இறைச்சி விற்பனை கடைகள் விற்பனையை துவங்குவர். மீன் மார்க்கெட்டுக்கு, சனிக்கிழமை மதியம் முதல் இரவு வரை வரும் மீன்கள், ஞாயிறு காலையில் விற்கப்படும். நாளை தீபாவளி பண்டிகை, பலரும் இன்று காலை முதல் இரவு வரை சொந்த ஊர் செல்ல ஆர்வம் செலுத்துவர் என்பதால், ஒரு நாள் முன்பாக நேற்று இறைச்சிக் கடைகள் பல இடங்களில் செயல்பட துவங்கின. மீன்மார்க்கெட்டில் வழக்கமான சனிக்கிழமை விற்பனையே நடந்தது.