/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மறுநாள் இரவு முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள்
/
நாளை மறுநாள் இரவு முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள்
ADDED : அக் 25, 2024 10:31 PM
வரும், 28ம் தேதி இரவு முதல் தீபாவளி சிறப்பு பஸ் இயக்கம் துவங்குவதால், இன்றும், நாளையும் இயங்கும் வாராந்திர சிறப்பு பஸ் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறையின் போது வெளியூர் செல்லும் பயணிகள்வசதிக்காக, 50 சிறப்பு பஸ்களை மத்திய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி என மூன்று பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும், திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள்இயக்குவர். வரும், 31ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், சிறப்பு பஸ்கள், வரும், 28ம்தேதி இரவு முதல் இயங்க துவங்குகிறது. தொடர்ந்து, 31ம் தேதி மதியம் வரை பஸ் இயக்கப்படுகிறது.
வரும் வாரத்தில் நான்கு நாட்கள் பஸ்இயக்க போவதால், அப்போது நிறைய பேர்சிறப்பு பஸ்சில் பயணிக்க வாய்ப்புள்ளது.இன்றும், நாளையும் வழக்கமான கூட்டம் இருக்காது என்பதால், வாராந்திர சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,25 சிறப்பு பஸ்கள் மட்டுமே சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படுகின்றன.