
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், அனுப்பர்பாளையத்திலுள்ள மரியா லயா பெண் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்துவரும் குழந்தைகளுடன், கலெக்டர் மனிஷ் நாரணவரே தீபாவளி கொண்டாடினார். குழந்தைகளுக்கு, இனிப்பு, பட்டாசு, புத்தாடை மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மேஜிக் ஷோ மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'மாணவர்கள், சமூக ஊடக பயன்பாடுகளை தவிர்த்து, உயர்ந்த இலக்கை அடைய வேண்டும்' என, கலெக்டர் அறிவுரை கூறினார்.
அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது; கலெக்டர் தனது கையால், குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.