/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.கே.டி., குளேபல் பள்ளிசி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
/
டி.கே.டி., குளேபல் பள்ளிசி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
டி.கே.டி., குளேபல் பள்ளிசி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
டி.கே.டி., குளேபல் பள்ளிசி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2025 01:04 AM

திருப்பூர் : திருப்பூர், அமராவதிபாளையத்தில் செயல்படும், டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளி, இக்கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் நடந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதிய மாணவர்கள் 100 சதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதில், 12ம் வகுப்பு பொது தேர்வில், தஷ்வந்த் 89 சதவீதமும், சூரஜ் பாஷா, 87 சதவீதமும் மதிப்பெண் பெற்றனர். மேலும், 10ம் வகுப்பு தேர்வில், மாணவர் சத்யபிரகாஷ், 91 சதவீதமும், சுதர்ஷனா 90 சதவீதமும் மதிப் பெண் பெற்றனர். பல்வேறு பாடங்களில் 20 பேர், 90 சதவீதத்துக்கும் மேல் பெற்றுள்ளனர். பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 11ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், 30 ஆயிரம் ரூபாய் வரை; 90 சதவீதம் பெற்றால் 20 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படும்,' என்றனர்.