/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு; திருப்பூர் அ.தி.மு.க.,வில் திடீர் பரபரப்பு
/
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு; திருப்பூர் அ.தி.மு.க.,வில் திடீர் பரபரப்பு
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு; திருப்பூர் அ.தி.மு.க.,வில் திடீர் பரபரப்பு
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு; திருப்பூர் அ.தி.மு.க.,வில் திடீர் பரபரப்பு
ADDED : மார் 19, 2024 12:10 AM
திருப்பூர்:திருப்பூர் தொகுதியில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு, செல்வாக்கான வேட்பாளரை களமிறக்க, அ.தி.மு.க., வேகமாககாய்நகர்த்த துவங்கி விட்டது.
திருப்பூர் லோக்சபா தொகுதி, நான்காவது தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகிவிட்டது. இம்முறை, நாம் தமிழர் கட்சி உட்பட, திருப்பூரை பொறுத்தவரை, நான்குமுனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., என, மும்முனை போட்டி பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூ., கட்சி வேட்பாளராக, சிட்டிங் எம்.பி., சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட் டுள்ளார். அதாவது, திருப்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கப்போகிறார். முதல் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்ததால், அப்போதைய வேட்பாளர் சிவசாமிக்கு பிரசாரம் செய்திருக்கிறார்.
இருப்பினும், சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதை, அ.தி.மு.க., இரண்டு கோணத்தில் பார்க்கிறது. அதாவது, தொகுதி முழுவதும் அறிமுகமான வேட்பாளர் என்பதால், அ.தி.மு.க.,விலும், மக்களிடையே செல்வாக்குள்ள, அறிமுகமான வேட்பாளரை களமிறக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
மிகக்குறுகிய கால அவகாசம் மட்டுமே இருப்பதால், தொகுதிக்குள் அறிமுகமாகி வருவதற்குள், பிரசாரம் முடிந்துவிடும். எனவே, புதுமுகமாக இல்லாமல், நன்கு அறிமுகமான வேட்பாளரை, கட்சி செலவில் நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இரண்டாவதாக, சிட்டிங் எம்.பி., மீது, தொகுதிக்குள் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதும், பனியன் தொழிலுக்காக குரல் கொடுக்கவில்லை.
குறு, சிறு தொழில்களை முடக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும் குரல்கொடுக்கவில்லை என்பது, பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது. குறிப்பாக, திறமையான பேச்சாளராக இருந்தும், தி.மு.க., ஆட்சியின் அவலங்கள் குறித்து வாய்திறக்கவில்லை என, கட்சியினர் புலம்கின்றனர்.
இந்நிலையில், மீண்டும் சுப்பராயன் களமிறங்க இருப்பதால், இருகோணத்திலும் அவருக்கு ஈடுகொடுக்கும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்; தோழர்களை திணறடிக்கும் அளவுக்கு, வலுவான வேட்பாளரை களமிறக்கி, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் அ.தி.மு.க.,வுக்குஉருவாகியுள்ளது.

