/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.,கூட்டணி கட்சிகள் சார்பில், உடுமலை நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகரச்செயலாளர் வேலுசாமி, துாய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

