/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தியில் மீண்டும் படகு சவாரி: அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
/
திருமூர்த்தியில் மீண்டும் படகு சவாரி: அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
திருமூர்த்தியில் மீண்டும் படகு சவாரி: அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
திருமூர்த்தியில் மீண்டும் படகு சவாரி: அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
ADDED : நவ 11, 2025 10:18 PM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணியர் வசதிக்காக, திருமூர்த்தி அணையில் படகு சவாரி, 20 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டது. தளி பேரூராட்சி மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது.
இதற்காக, படகு இல்லம், படகுகள் என பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. படகுகள் பழுது, சரி செய்வது, நிர்வாக சிக்கல்கள் காரணமாக, கடந்த, 15 ஆண்டுகளாக படகு சவாரி முடங்கியுள்ளது.
இதற்காக வாங்கப்பட்ட படகுகள் சிதிலமடைந்தும், படகு இல்லம் பொலிவிழந்தும் காணப்படுகிறது. சுற்றுலா மையமான திருமூர்த்தி அணையில் படகு சவாரியை மீண்டும் துவக்க வேண்டும், என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருமூர்த்தி அணையில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில், திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் ஆதி சிவன், தளி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா, திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ், பூபதி, சத்யம் பாபு, பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

