/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 05:52 AM

திருப்பூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெயர் மாற்றுவதையும், இத்திட்டத்தை ஒழிக்க நினைப்பதாக கூறியும் இவற்றைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக,தமிழகம் முழுதும் ஒன்றியங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மங்கலம் ஊராட்சி அலுவலகம் முன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பொங்கலுாரில்... பொங்கலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பாலுசாமி, முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் தங்கவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மா.கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் பாலன், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

