/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தி.மு.க. கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 07:55 AM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் நினைவிடம் முன்புறம் நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், காங். மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணன், கோபிநாத் பழநியப்பன், முத்துக்கண்ணன் (மா.கம்யூ.) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். நேற்று காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் கட்சியினர் அழைத்து வரப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் துவங்கிய சில நிமிடங்களில் பலரும் தாங்கள் வந்த வாகனங்களில் சென்று அமர்ந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்த போதே பெரும்பாலானோர் கிளம்பினர்.
அப்போது, செல்வராஜ், 'கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை கலைந்து செல்லாமல், ஆர்ப்பாட்டம் முடியும் வரை இருக்க வைக்க வேண்டும். இதை கவனத்தில் கொள் ளுங்கள்,' என்று மைக்கில் அடிக்கடி சொல்லி கொண்டிருந்தார்.

