ADDED : பிப் 13, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக கூறி பா.ஜ.வையும், அதற்கு துணை போவதாக அ.தி.மு.க.வையும் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், அவிநாசி தபால் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி எம்.பி. ராஜா பேசினார்.
மாவட்ட தி.மு.க. செயலாளர் தினேஷ் குமார், சட்டமன்றத் தேர்தல் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபா ஷங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி,ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பால்ராஜ், நகரச் செயலாளர் வசந்தகுமார், அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி, திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார், நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
