/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம்
/
தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம்
தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம்
தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம்
ADDED : மார் 29, 2025 11:48 PM
அவிநாசி: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அவிநாசி ஒன்றியத்தில் நடுவச்சேரி, பழங்கரை, தெக்கலுார், நம்பியாம்பாளையம், சேவூர், தத்தனுார் ஆகிய பகுதிகளில், தி.முக., சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவற்றில், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அவைத்தலைவர் கந்தசாமி, விவசாய அணி மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், முன்னிலையில், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
l பொங்கலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் குமார், முன்னாள் கவுன்சிலர் லோகு பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடுவாயில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
l திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் நால் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, செயலாளர் விஸ்வநாதன், தலைமை வகித்தார். தொரவலுார் ஊராட்சி பஸ் ஸ்டாப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாநகரபொறுப்பாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.