/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., வடக்கு மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
தி.மு.க., வடக்கு மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
தி.மு.க., வடக்கு மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
தி.மு.க., வடக்கு மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : மார் 15, 2025 11:57 PM
அனுப்பர்பாளையம்: திருப்பூர், வடக்கு மாநகர தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் 15 வேலம்பாளையத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பொறுப்பாளர் தங்கராஜ், வரவேற்றார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார், சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து, மாநகரத்திற்குட்பட்ட 29 வார்டுகளில், 48 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடத்துவது.
இரட்டை பொறுப்பை வகிக்ககூடிய நிர்வாகிகள் ஏதேனும் ஒரு பொறுப்பை மட்டும் வைத்து கொண்டு மற்றொரு பொறுப்பில் இருந்து, ஒரு வாரத்திற்குள் விலகி கொள்ள கேட்டு கொள்வது; எல்லோருக்கும் எல்லாம் என்ற நிதி நிலை அறிக்கையை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்வது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வடக்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி, பகுதி செயலாளர் ராமதாஸ் உட்பட வடக்கு மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.