/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருணாநிதி படத்துக்கு தி.மு.க.,வினர் மலரஞ்சலி
/
கருணாநிதி படத்துக்கு தி.மு.க.,வினர் மலரஞ்சலி
ADDED : ஆக 07, 2025 11:29 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். அம்மாபாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள், தி.மு.க., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பூண்டி நகராட்சி தலைவர் குமார், நகர செயலாளர் மூர்த்தி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணி, 15. வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர், சிறுபான்மை அணியினர் பங்கேற்றனர்.

