/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் இடிப்பு
/
தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் இடிப்பு
ADDED : ஆக 09, 2025 10:36 PM

திருப்பூர்:ஆக்கிரமித்து கட்டப்பட்ட தி.மு.க., தொழிற்சங்க அலுவலக கட்டடம், கோர்ட் உத்தரவையடுத்து இடித்து அகற்றப்பட்டது.
திருப்பூர், குமரன் ரோடு - ரயில்வே ஸ்டேஷன் ரோடு இணையும் பகுதியில், சில பழைய கட்டடங்கள் உள்ளன. இதில், மாநகராட்சி இடத்தில், ஒரு கட்டடத்தில் தி.மு.க., பனியன் தொழிலாளர் தொழிற்சங்க அலுவலகம் நீண்ட காலமாக இயங்கி வந்தது.
இதையொட்டி, வக்கீல் சுகுணா தேவி என்பவருக்கு சொந்தமான ஒரு கட்டடமும் இருந்தது. சுகுணா தேவி தன் கட்டடத்தை பயன்படுத்த முடியாத வகையில், தொழிற்சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்து உட்புறத்தில் பயன்படுத்தினர்.
அதை காலி செய்து தரக்கோரி, அவர் கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இதனால், 2003 முதல் பல கட்ட போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. அதன் பின், 2024ல், 20 ஆண்டு போராட்டத்துக்கு பின், ஐகோர்ட்டில் அவர் தொடுத்த வழக்கில், அக்கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் கட்டடத்தை அகற்ற உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு இரண்டும் பயன் தரவில்லை. ஆளும்கட்சியின் தொழிற்சங்கம் என்ற நிலையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இரண்டும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகுணாதேவி, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில், அப்போதைய மாநகராட்சி கமிஷனர் வரும் 12ல் கோர்ட்டில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதனால், நேற்று மாநகராட்சி அலுவலர்கள் இயந்திரங்களுடன் சென்று தி.மு.க., தொழிற்சங்க கட்டடத்தை இடித்து அகற்றினர்.

