/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4ம் தேதி போராட்டம் தே.மு.தி.க., முடிவு
/
4ம் தேதி போராட்டம் தே.மு.தி.க., முடிவு
ADDED : டிச 01, 2024 12:56 AM
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி கட்சி அலுவலத்தில், தே.மு.தி.க., மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'திருப்பூர் மாநகராட்சி உயர்த்தியுள்ள சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டண வரி, வணிக வளாகங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி உள்ளிட்டவற்றை கண்டித்து, வரியை குறைக்க வலியுறுத்தி வரும், 4ம் தேதி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
வரும் டிச., 28ம் தேதி, சென்னையில் நடக்கும் கட்சித் தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

