/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெற்றி பெறும் யுத்தி என்ன தெரியுமா?
/
வெற்றி பெறும் யுத்தி என்ன தெரியுமா?
ADDED : ஜன 11, 2024 07:04 AM
அவிநாசி : அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது.
இதில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
ஒவ்வொருவருக்கும் ஒரு நியதி வகுக்கப்பட்டு இருக்கும். அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டும். பொறுமை, ஆக்கபூர்வமான சிந்தனை, முழு ஈடுபாடு இவை ஒரு காரியத்தில் இருந்தால் அந்த காரியம் வெற்றி கிட்டும்.
இறைவனிடம் பக்தியை செலுத்தவும் ஈடுபாடு இருக்க வேண்டும். அரைகுறையாக செயலாற்ற நினைக்கும் போது அந்த செயல் முழுமை பெறாமல் போகும்.
அன்புடன் எதையும் செயலில் காட்ட வேண்டும். ஒருவரிடம் உள்ள குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி பார்க்கக்கூடாது; இதனால் அவரிடம் உள்ள பிற நல்ல குணங்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
அன்னபட்சி போல நல்லவற்றையும், தீயவற்றையும் பிரித்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள குறைகளை மற்றவர் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்று திருத்திக் கொள்ள வேண்டும். அதேபோல மற்றவரின் குறைகளை பிறரிடம் கூறி தரம் தாழ்த்தக்கூடாது.
ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழப் பழக வேண்டும். இவ்வுலகில் குறைகள் இல்லாத மனிதனாக வாழ்வது என்பது யாராலும் முடியாது.
இவ்வாறு, அவர் பேசினார்.