/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்
/
ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்
ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்
ரூ.25.64 லட்சம் கையாடல் மருத்துவர், 'மாஜி' ஊழியர் சிக்கினர்
ADDED : பிப் 26, 2026 07:02 AM
திருப்பூர்: போலி பில்கள் வாயிலாக, அரசு நிதி, 25.64 லட்சம் ரூபாய் கையாடல் செய்த அரசு டாக்டர் உட்பட, இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டார அரசு மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் டாக்டர் விஜயலட்சுமி, 59. இவர், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நிதியை கையாடல் செய்ததாகவும், அதற்கு, அங்கு பணி செய்த முன்னாள் பெண் ஊழியர் சிவசெல்வி உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அதில் 25 லட்சத்து, 64,000 ரூபாயை இருவரும், கையாடல் செய்தது தெரிந்தது. அதையடுத்து, விஜயலட்சுமி, சிவசெல்வி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
போலீசார் கூறுகையில், 'மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் டேங்க் பராமரிப்பு உள்ளிட்ட வகைகளில், 25.64 லட்சம் ரூபாயை போலி பில்கள் வாயிலாக கையாடல் செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.