/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவர் பற்றாக்குறை நோயாளிகள் காத்திருப்பு
/
மருத்துவர் பற்றாக்குறை நோயாளிகள் காத்திருப்பு
ADDED : ஏப் 04, 2025 03:17 AM

அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோட்டில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் காலை 7:00 மணி முதலே வரிசையில் காத்து நிற்கின்றனர்.
சளி, காய்ச்சல் ஆகியவற்றிற்காக வரும் நோயாளிகள் புற நோயாளி சீட்டு பதிவு செய்து மருத்துவரிடம் பரிசோதித்து செல்கின்றனர்.
காலை 8:00 முதல் 10:00 மணி வரை ஷிப்டில் ஒரு மருத்துவரும், அதன் பிறகு 10:00 முதல் 12:00 மணி வரை மற்றொரு மருத்துவரும் பணியில் இருக்க வேண்டும்.
அசம்பாவிதங்கள், விபத்துகளால், காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக வருபவர்களையும் கவனிக்கும் பொறுப்பு, இதே மருத்துவர்களுக்குத்தான் உண்டு. மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதில் விடுப்பு, மாற்று பணி என மருத்துவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நேற்று பணிக்கு வரவேண்டிய மருத்துவர் விடுப்பு எடுத்துச் சென்றதால், மாற்றுப் பணிக்கு வர வேண்டிய மருத்துவரும் இல்லாத சூழ்நிலையில் பெண் மருத்துவர் ஒருவரே அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது.
பல மணி நேரம் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். கூடுதல் மருத்துவரை பணியில் அமர்த்தி நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை தேவை.