/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்க்கடி; அலட்சியம் ஆபத்தாகும்
/
நாய்க்கடி; அலட்சியம் ஆபத்தாகும்
ADDED : அக் 04, 2025 11:13 PM

''நாய்க்கடி தடுப்பூசியை குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் போட வர வேண்டும். நாய்க்கடி விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது'' என, பல்லடம் அரசு மருத்துவமனை, நாய்க்கடி சிகிச்சை பிரிவில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ளவை:
நாய் கடித்தால் செய்ய வேண்டியவை:
நாய் கடித்த உடன் ஓடும் தண்ணீரில் ஐந்து நிமிடம் கடித்த இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும். உடனே டி.டி. மற்றும் ஏ.ஆர்.வி. நாய்க்கடி தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனை செல்ல வேண்டும். நாய்க்கடி தடுப்பூசியை குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் போட வர வேண்டும். கடித்த நாய் உங்கள் பகுதியில் இருந்தால், கண்காணிக்க வேண்டும். கடித்த நாயின் உடல் நிலை, மாற்றம் பற்றிய தகவல்கள் தெரிய வந்தால், மருத்துவமனைக்கு தெரிவிக்கவும்.
செய்யக்கூடாதவை:
நாய்க்கடி காயத்தின் மேல் சுண்ணாம்பு, மஞ்சள் தடவ வேண்டாம். நாய் கடித்த பின் எந்த நிலையிலும் அலட்சியப்படுத்த வேண்டாம். நாயை உடனே கொல்ல வேண்டாம். சிராய்ப்பு, நக்குதல், எச்சில் படுதல் ஆகியவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் நாய்க்கடி தடுப்பூசி அட்டவணையை பின்பற்றுவதை அலட்சியம் செய்யக்கூடாது.
விழிப்புணர்வு தேவை
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,' நாய்க்கடித்து சிகிச்சை வருவோர் அலட்சியமாக உள்ளனர். அனைவரும் நாய்கள், நாய்க்கடி குறித்து அறிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
----
பல்லடம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பு பலகை