/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குதிரை மசால் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
/
குதிரை மசால் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 04, 2025 11:14 PM

கா ல்நடைகளுக்கு தீவனமாகும் குதிரை மசால் விளைவிப்பது பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் துவங்கியுள்ளது. கரையாம்புதுார், பொங்கேகவுண்டன் புதுார் சுற்றுவட்டாரத்தில் குதிரைமசால் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வரும் சூழலில், கால்நடைகளுக்கு அடர் தீவனத்தை குறைக்க வேண்டும். இதனால், ஆழமாக வேரூன்றி, பல தட்பவெப்ப நிலைகளில் வளரும் தன்மை கொண்ட குதிரைமசால் பயிரிடுகிறோம். இப்பயிருக்கு தண்ணீர் குறைவாக இருந்தால் போதும். வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் கூட, செழித்து வளரக்கூடியது.செம்மண், வண்டல் மண்ணில் வளரும் இப்பயிர், ஒருமுறை பயிரிட்டால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை நல்ல மகசூல் தரும் என்பதால், விவசாய பணி குறைவு என்பதால், பயிரிடுகிறோம்.
இந்த பயிருக்கு சீசன் கிடையாது. ஆண்டின் அனைத்து நாட்களுக்கும் விளையும். செழித்து வளர தொழு உரம், இயற்கை உரம் மட்டும் போதும் என்பதால் தான், வேலை குறைகிறது. அத்துடன், அதிக புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கால்நடை வளர்ப்பாளர்கள் தேடி வந்து, கட்டு 15 - 25 ரூபாய் வரை விலை வைத்து வாங்கிச் செல்கின்றனர். இவற்றை சாப்பிடும் ஆடுகள் எடை உயர்வதால், விற்பனை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூனில் பயிரிட்டு, 60 - 70 நாட்களுக்குள் ஒரு பருவம் எடுத்து, விற்பனை செய்து விட்டோம். இம்மாத இறுதிக்குள் அடுத்த பருவத்துக்கு தயாராகி விடும்.