sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெருங்குது தீபாவளி; பேன்சி ரக பட்டாசுகள் குவிப்பு

/

நெருங்குது தீபாவளி; பேன்சி ரக பட்டாசுகள் குவிப்பு

நெருங்குது தீபாவளி; பேன்சி ரக பட்டாசுகள் குவிப்பு

நெருங்குது தீபாவளி; பேன்சி ரக பட்டாசுகள் குவிப்பு


ADDED : அக் 04, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுவர் முதல் பெரியோர் வரை, அனைவரையும் உற்சாகத்தில் திளைக்க வைக்கும் பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது.வகை வகையான பட்டாசு, விதம் விதமான வண்ணங்களில் புஸ்வாணம், மத்தாப்பு என, வாண வேடிக்கை நிகழ்த்துவதில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் குதுாகலமடைவர்.

அனைத்து தரப்பினரும், பட்டாசு வெடித்து கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது.சிவகாசி தான், பட்டாசு உற்பத்தியின் தலைநகரம்; ஆண்டு முழுக்க அங்கு பட்டாசு உற்பத்தி நடக்கிறது; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடுகின்றனர். தீபாவளிக்கு, இன்னும், 17 நாள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசு விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு விற்பனையை அதிகரிக்க, விதம் விதமான, வகை வகையான பட்டாசுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும், புதிய ரக பேன்ஸி ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. திருப்பூரிலும் இவை குவிக்கப்பட்டுள்ளன.

நேரடி பட்டாசு விற்பனை மைய உரிமையாளர் சீனிவாசன் கூறியதாவது:ஆண்டுக்காண்டு, பட்டாசு வாங்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை ஈர்ப்பதற்காக தான், ஆண்டுதோறும் புதிய ரக பேன்ஸி பட்டாசுகள் சந்தைக்கு வருகின்றன.அதன்படி, இந்தாண்டு கிடார் இசைக்கருவி, பேட் மற்றும் பந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் பஸ் உள்ளிட்ட பல வடிவங்களில், மக்களை ஈர்க்கும் வகையிலான மத்தாப்பு, புஸ்வாணம் மற்றும் வெடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பட்டாசு தயாரிப்பு என்பது, ஆண்டாண்டு காலமாக நடக்கும் சுதேசி தொழில் என்ற உணர்வும், பட்டாசு தொழிலில் ஈடுபடும், 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு, பொது மக்கள் பட்டாசுகளை அதிகளவில் வாங்க வேண்டும்.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் தரம் நன்றாக இருக்கும் என்பதால் மார்ச் மாதமே, பட்டாசு கொள்முதலில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.---

---

திருப்பூரில் விற்பனைக்கு வந்துள்ள, ஸ்கை ஷாட், கிரிக்கெட் பேட் அண்ட் பால், லோட்டஸ் வீல், ட்ரை கலர், புஸ்வாணம், ரிங், ட்ரோன், ஸ்வார்ட், கேனோன் பால், ஈமு எக், டாப் கன், கிடார், பஸ், ஏ.டி.எம். ஆகிய பேன்சி ரக பட்டாசுகள்.

மக்களை கவர விதம் விதமாக பட்டாசு முன்பெல்லாம் தீபாவளியன்று, மாலை முதல், இரவு வரை வீதி, தெருக்களில் மக்கள் கூடி உற்சாகமடைவர். ஒவ்வொருவர் வீடுகளிலும், பட்டாசு வெடிப்பதை பரஸ்பரம் வேடிக்கை பார்ப்பர். ஆனால், மாசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, சமீப ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதில் மக்களின் ஆர்வம் சற்று குறைந்துள்ளது. இதனால், விதம்விதமாக பட்டாசு வகைகளை அறிமுகப்படுத்தி, பொதுமக்களை கவர முயல்கின்றனர்.








      Dinamalar
      Follow us