/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வளாகத்தில் திரியும் நாய்கள்
/
பள்ளி வளாகத்தில் திரியும் நாய்கள்
ADDED : அக் 16, 2025 11:22 PM

அவிநாசி: அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் செயல்படுகிறது.
இதில், 900 மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால் உணவு இடைவேளை மற்றும் கழிப்பிடம் செல்வதற்கும் என மாணவியர் வகுப்பறையை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
ஏற்கனவே, பள்ளி மைதான வளாகத்தில் உண்டு உறைவிட பள்ளியும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் வட்டார வள மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம், மாணவிகள் கழிவறை பகுதி, விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள மர நிழலில் நாய்கள் உறங்குவதால் அப்பகுதிக்குச் செல்ல மாணவிகள் மிகுந்த அச்சப்படுகின்றனர்.
இதுதவிர, விளையாட்டு மைதானத்தில் நாய்கள் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஓடுவதால் மாணவியர் உடற்பயிற்சி வகுப்பை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.