/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறைச்சி கழிவு உண்ணும் நாய்கள்; ஆடுகளை கடித்து குதறுவதாக புகார்
/
இறைச்சி கழிவு உண்ணும் நாய்கள்; ஆடுகளை கடித்து குதறுவதாக புகார்
இறைச்சி கழிவு உண்ணும் நாய்கள்; ஆடுகளை கடித்து குதறுவதாக புகார்
இறைச்சி கழிவு உண்ணும் நாய்கள்; ஆடுகளை கடித்து குதறுவதாக புகார்
ADDED : செப் 25, 2024 10:45 PM
பொங்கலுார் : கடந்த, 20 ஆண்டுகளில் கறிக்கோழி பண்ணைகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. கோழி பண்ணைகளில் இயல்பாக இறக்கும் கோழிகளை பலர் குழிதோண்டி புதைப்பது இல்லை.
கோழி பண்ணைகள் பெருகிய அளவு கறிக் கடைகளும் அதிகரித்துள்ளது. அவர்களும் இறைச்சி கழிவுகளை திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர். அதை தின்பதற்காக ஏராளமான நாய்கள் படையெடுக்கின்றன. இறைச்சிக் கழிவுகளை தின்று பழகிய நாய்கள் பின்பு ஆடுகளை கடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: பல இடங்களில் இறைச்சிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. இறைச்சிக் கழிவுகள் கிடைக்காத போது, அதை தின்று ருசி கண்ட நாய்கள் இறைச்சியை தேடி அலைகின்றன.
அதன்பின் அவை தோட்டங்களில் உள்ள ஆட்டு பட்டிகளில் புகுந்து ஆடுகளை கடித்து குதறுகின்றன. இதனால் விவசாயிகள் ஆடுகளையே வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திறந்தவெளியில் இறைச்சி கழிவு வீசப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவற்றை முறையாக எரிக்க வேண்டும். மீறுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.