sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வாக்கிங்' செல்வோரை 'ரன்னிங்' செய்ய வைக்கும் நாய்கள்!

/

'வாக்கிங்' செல்வோரை 'ரன்னிங்' செய்ய வைக்கும் நாய்கள்!

'வாக்கிங்' செல்வோரை 'ரன்னிங்' செய்ய வைக்கும் நாய்கள்!

'வாக்கிங்' செல்வோரை 'ரன்னிங்' செய்ய வைக்கும் நாய்கள்!


ADDED : ஜன 28, 2025 05:36 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருநாய்த் தொல்லை

அங்கேரிபாளையத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர், நடைபயிற்சி செல்வோரை நாய்கள் துரத்தித்துரத்தி கடிக்கின்றன.

- சுரேஷ், அங்கேரிபாளையம்.

சுத்தம் செய்யலாமே

பல்லடம், குமரன் வீதி, பி.ஏ.பி., கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது; மதுபாட்டில் வீசியெறிப்படுகிறது. அசுத்தமாக உள்ளது. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உதயகுமார், குமரன் வீதி.

கழற்றப்பட்ட பலகை

திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு சாலை அகலப்படுத்தும்போது கழற்றப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை மீண்டும் பொருத்தப் படாமல், ரோட்டோரத்தில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

- மாணிக்கம், வீரபாண்டி.

எரியாத விளக்கு

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில் பாலத்தில் ஒரு தெருவிளக்கு கூட எரிவதில்லை. புகார் தெரிவித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் மாநகராட்சி கண்டுகொள்ளவே இல்லை.

- அருண்மாதவன், அணைக்காடு.

n திருப்பூர், காந்தி நகர், பத்மாவதிபுரத்தில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- அசோக், பத்மாவதிபுரம்.

n திருப்பூர், மீன் மார்க்கெட் செல்லும் வழியில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. திருட்டு பயத்தில் மக்கள் சென்று திரும்புகின்றனர். எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.

- அபுதாகிர், வெள்ளியங்காடு.

கிளையை வெட்டலாமே

திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனி, விநாயகர் கோவில் அருகே தெருவிளக்கை சுற்றி மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால், வெளிச்சம் முழுமையாக கிடைக்காமல் உள்ளது. மரக்கிளைகளை வெட்டி அப்புறப் படுத்த வேண்டும்.

- பிரபாகரன், சூர்யா காலனி.

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி - மிஷின் வீதி சந்திப்பில் குழாய் உடைந்து, இரண்டு வாரங்களாக தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகி, குழியாகியுள்ளது.

- முத்துராமன், மிஷின் வீதி.

கடிகாரம் பழுது

திருப்பூர், வெள்ளி விழா பூங்கா முன்புறம் உள்ள கடிகாரம் பழுதாகியுள்ளது. மாநகராட்சி கண்காணித்து சரிசெய்ய வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், பார்க் ரோடு.

பலகை சேதம்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், ஜெய்வாபாய் ஸ்கூல் ரோட்டில், வழித்தடம் குறித்த அறிவிப்பு பலகை வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. பலகையை மாற்ற வேண்டும்.

- ராஜூ, ராயபுரம்.

குப்பை அள்ளுங்க

திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிகமாக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இவ்வளாகத்தில் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும்.

- அருணாச்சலம், அரிசிக்கடை வீதி.

குழியை மூடுங்க

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் கடந்து வாகனங்கள் திரும்பும் இடத்தில், சாலை குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.

- விஸ்வநாத், புதுராமகிருஷ்ணாபுரம்.






      Dinamalar
      Follow us