ADDED : டிச 23, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. 'நல்லது நண்பர்கள்' அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சரவணன், மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனிதம் சமூக சேவை அமைப்பு அன்பரசன், லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் யங் ஆங்கர் கிரண், ஜெயம் சமூக நல அறக்கட்டளை மகேந்திரன், மெர்சி மிஷன் முனிராஜ், 'மனிதம் மறவோம்' அறக்கட்டளை தமிழ்ச்செல்வன், 'உதவிடுவோம் உயிர் உள்ளவரை தொண்டு' அறக்கட்டளை ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பெறப்பட்ட 50 யூனிட் ரத்தம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு தானமாக பெறப்பட்டது. ஜீவானந்தம் நன்றி கூறினார்.