/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனங்கள் இணைந்த நாளில் மரம் வளர்க்க நன்கொடை
/
மனங்கள் இணைந்த நாளில் மரம் வளர்க்க நன்கொடை
ADDED : பிப் 23, 2024 12:16 AM

திருப்பூர்;திருப்பூரில், திருமண நாளில், புதுமணத்தம்பதி ஆயிரம் மரக்கன்று நட்டு பராமரிக்க நன்கொடை வழங்கியதை பலரும் பாராட்டினர்.
சென்னையை சேர்ந்த பிரணவ் தியாகராஜன், திருப்பூரை சேர்ந்த ரீட்டு ஆகியோரின் திருமணம் வரவேற்பு விழா, வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள கணேஷ் திருமண மஹாலில் நேற்று நடந்தது. புதுமணத்தம்பதி தங்கள் திருமணத்தையொட்டி, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்காக, ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பு செய்வதற்கான முழு தொகையையும், வெற்றி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினரிடம் வழங்கினர்.
திருமணம் பந்தம் துவங்கும் நாளில், பசுமைக்கு கொடை அளித்த மணமக்களை, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மற்றும் பசுமை ஆர்வலர்கள் வாழ்த்தினர். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், இணைந்து மரங்கள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.