/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேட்காதே... பார்க்காதே... பேசாதே' 'டிஜிட்டல்' மோசடியில் தப்பிக்க வழி
/
'கேட்காதே... பார்க்காதே... பேசாதே' 'டிஜிட்டல்' மோசடியில் தப்பிக்க வழி
'கேட்காதே... பார்க்காதே... பேசாதே' 'டிஜிட்டல்' மோசடியில் தப்பிக்க வழி
'கேட்காதே... பார்க்காதே... பேசாதே' 'டிஜிட்டல்' மோசடியில் தப்பிக்க வழி
ADDED : டிச 14, 2024 11:35 PM

பேராசை பெருநஷ்டம்
தற்போதைய சூழலில், 'குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்' என்ற பெரும் பேராசை மனிதர்களை ஆட்கொள்ள துவங்கியிருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால், அடுத்தவரின் வங்கிக்கணக்கிற்குள் நுழைந்து, பணத்தை களவாடும் 'டிஜிட்டல் குற்றங்கள்' அதிகரித்து வருகின்றன.
ஆர்வக்கோளாறு
'உங்கள் வங்கிக்கணக்கில், 10 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட இருக்கிறது; 2.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரெடிட் கார்டு தயாராக உள்ளது' என்பது போன்ற ஆசையை துாண்டும் வார்த்தைகள் அடங்கிய எஸ்.எம்.எஸ்.,கள், மொபைல் போன்களின் 'இன்பாக்ஸ்'களை தினம், தினம் நிரப்புகின்றன; அதுவும், பிரபல வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் பெயரில் வரும் அத்தகைய எஸ்.எம்.எஸ்.,களை பார்த்தவுடன், அதை 'கிளிக்' செய்து உள்நுழையும் ஆவல் மக்களிடம் மேலோங்குகிறது. ஆர்வக்கோளாறில் தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் 'ஓ.டி.பி.,' எண்ணை செலுத்திய மறுவினாடி, அவர்களது வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் களவாடப்படுகிறது. அப்போது தான், அவை, போலி எஸ்.எம்.எஸ்., என்பது தெரியவருகிறது.
அசலை மிஞ்சும் போலி
மிகுந்த மனச்சுமையுடன், போலீசாரிடம் புகார் மனு வழங்கினால், ''இப்படித் தான் ஏமாத்துவாங்க; நீங்கதான் கவனமா இருக்கணும்'' என்பார்கள். 'அச்சு அசல் வங்கிகளின் முத்திரையுடன் எஸ்.எம்.எஸ்., வருவதால், அதை நம்பி, உள்நுழைந்து விட்டோம்' என்பது போன்ற காரணங்களை கூறினாலும், 'அச்சு அசலாக தான் போலிகளும் உலா வருகின்றனர்; நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்' என்ற, அறிவு மட்டுமே மிஞ்சும்.
'போலிகளை ஒழிக்க வழியே இல்லை' என்ற சூழலில், 'தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே...' என போதித்த குரங்கு பொம்மைகள், தற்போது 'யாருக்கும் ஓ.டி.பி.,யை பகிராதீர்கள்; அடையாளமில்லாத 'லிங்க்'களை திறக்காதீர்கள்; போலி அழைப்புகளை ஏற்காதீர்கள்...' என்ற அறிவுரை வழங்கத் துவங்கியிருக்கின்றன.