sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதல்வர் சொன்ன மாதிரி எல்லாம் செய்யாதீங்க! செலவில்லாத பணிகளை செய்து கணக்கு காட்ட உத்தரவு

/

முதல்வர் சொன்ன மாதிரி எல்லாம் செய்யாதீங்க! செலவில்லாத பணிகளை செய்து கணக்கு காட்ட உத்தரவு

முதல்வர் சொன்ன மாதிரி எல்லாம் செய்யாதீங்க! செலவில்லாத பணிகளை செய்து கணக்கு காட்ட உத்தரவு

முதல்வர் சொன்ன மாதிரி எல்லாம் செய்யாதீங்க! செலவில்லாத பணிகளை செய்து கணக்கு காட்ட உத்தரவு


ADDED : அக் 16, 2025 07:58 PM

Google News

ADDED : அக் 16, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'கிராம ஊராட்சிகளில், அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் மேற்கொள்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்' என்ற முதல்வரின் உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில், செலவில்லாமல் பராமரிப்பு பணிகளை செய்து கணக்கு காட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அக்., 11ம் தேதி, ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில், மழைநீர் சேகரிப்பு, துாய்மை பணி, டெங்கு காய்ச்சல் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார்.

அவர் பேசும் போது, ''நம்ம ஊர், நம்ம அரசு என்ற பெயரில், கிராம சபையில் மக்களை கலந்தாலோசித்து, மூன்று முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றி, அவை உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்,'' என கூறியிருந்தார்.

இது குறித் து, ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களின் அடிப்படை தேவையாக உள்ள, குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவது, புதிதாக 'போர்வெல்' அமைப்பது, சாலை, நடைபாதை, மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் உள்ளிட்ட ஏழு பணிகளை தேர்வு செய்து, அதில், மூன்று பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பட்டியல் வழங்கினோம்.

நிதி பற்றாக்குறை யை காரணம் காட்டி, இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஊரக வளர்ச்சி அதிகாரிகள், முதலீடு இல்லாத, பராமரிப்பு சார்ந்த பணிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என, கூறினர்.

அதன்படி, 'போர்வெல்' மோட்டார் பழுது பார்ப்பது; குடிநீர் குழாய் இணைப்பு விஸ்தரிப்பு செய்வது; குறைந்த செலவினத்தில், கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது; 30 முதல், 50 மீ., நீளத்துக்கு மட்டும் கான்கிரீட் ரோடு அமைப்பது.

குறைந்த துாரத்துக்கு கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்; தேர்வு செய்யப்படும் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்ற அடிப்படையில் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

ஊ ராட்சி எல்லைக்குள் மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை உட்பட பிற துறைகளின் அனுமதி பெற் று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளும் போது, பிற துறைகளின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பணிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளன ர்.

மறுபட்டியல் தயாரித்து, ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். முதல்வர் சுட்டிக்காட்டியது போல், ஊராட்சி மக்களின் தேவையறிந்து அப்பணிகளை மேற்கொள்ளாமல், நிதி செலவினம் இல்லாத, அதிகாரிகள் பட்டியலிட்டு வழங்கியுள்ள பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us