/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையில் சிக்காதே... வாழ்க்கையை இழக்காதே!
/
போதையில் சிக்காதே... வாழ்க்கையை இழக்காதே!
ADDED : அக் 26, 2025 03:11 AM

'போ தையின் மாய தோற்றத்தில் சிக்கி, உன் வாழ்க்கை பயணத்தை இழந்து விடாதே; நீ ஒழுக்கத்தின் பாதையில் பயணிக்க, போதைக்கு அடிமையாக கூடாது; வாழ்நாளில் போதை தொடவே கூடாது என உறுதி ஏற்றுக்கொள்,' என, அரசு பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்படும் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோட்ட கலால் அலுவலர் ஜெய்சிங் சிவக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமிபிரபா முன்னிலை வகித்தார். போதை தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்வாஞ்சிநாதன் வரவேற்றார்.
பள்ளியின் துவங்கிய ஊர்வலம், வீரபாண்டி சாலை வழியாக பயணித்து, முத்தையன் கோவில் ஸ்டாப் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
வாழ்க்கைக்கு உதவாது 'ஸ்கூலுக்கு போகும் வயதில், 'கூலிப்' எதுக்கு? வாயில், நீ இழுத்து விடும் சிகரெட், இடுகாட்டுக்கு போகும் சீக்ரெட், போதையின் பாதை அதுவே மரணத்தின் பாதை, இளமையை கெடுக்காதே.
போதை ஒரு பாம்பு - அது நஞ்சை மட்டுமே கக்கும். போதையின் மாய தோற்றத்தில், உன் வாழ்க்கை பயணத்தை இழந்து விடாதே.
நீ சிறந்த மருத்துவராக, ஆசிரியராக, பொறியாளராக வேண்டுமா, ஒழுக்கத்தின் பாதையில் பயணிக்க, போதைக்கு அடிமையாக கூடாது/வாழ்நாளில் தொடவே கூடாது என உறுதி ஏற்றுக்கொள்,' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவியர் ஊர்வலம், மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸில், 'போதை மனிதனை நோயாளியாக்கி அவனை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு துாண்டுகிறது.
போதையால், உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது; நிரந்த அவப்பெயருக்கு போதைக்கு அடிமையானவருக்கு மட்டுமின்றி, பிள்ளைகளின் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது. வீட்டுக்கும், நாட்டுக்கும் வளம் சேர்க்க போதைக்கு அடிமையாகாதீர்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

