/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மொபைல்போன் கொடுத்து சாப்பிட வைக்காதீங்க'
/
'மொபைல்போன் கொடுத்து சாப்பிட வைக்காதீங்க'
ADDED : அக் 13, 2025 12:42 AM

பல்லடம்:''மொபைல் போன் கொடுத்து குழந்தையை சாப்பிட வைக்காதீர்கள்'' என்று கோவை சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை நிறுவனர் நேமிநாதன் பேசினார்.
பல்லடம் 'வனம்' அமைப்பின் வான் மழை கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனர் செல்லப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கோவை சைல்டு டிரஸ்ட் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நேமிநாதன் பேசியதாவது:
ஆன்டிபயாட்டிக் என்பது கூர்மையான கத்தி. நாமே சென்று கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவது ஆபத்தானது. காய்ச்சல் என்பது கிருமிகளிடமிருந்து பாதுகாக்க, உடல், உஷ்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. குழந்தைகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குழந்தைகளை குழந்தையாக நினைக்க வேண்டும். நாமும் குழந்தையாக மாறி விட வேண்டும்.
அன்பு, பாசம் அதிகமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் நம் குடும்பத்துக்கு ஏற்றவாறு வளரும். திட்டி வளர்ப்பது தவறான முறை. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இயற்கையே எதிர்காலம் என்பதை உணர்த்துவது அவசியம்.
பெற்றோர்தான் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் தடுப்பூசியில் சிறந்த தடுப்பூசி தாய்ப்பால். சின்னச்சின்ன பரிசுக்கும் குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். பசி வந்தால் கட்டாயம் சாப்பிடுவார்கள்.
இதற்காக, மொபைல் போன் கொடுத்து சாப்பிட வைப்பது தவறு. கொரோனா போய்விட்டது; மொபைல் போன் பழக்கம் போகவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.