/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல் உபாதைகளை உதாசீனம் செய்யாதீர்
/
உடல் உபாதைகளை உதாசீனம் செய்யாதீர்
ADDED : ஆக 20, 2025 11:20 PM

டாக்டர் பாலசுப்ரமணியம், நிர்வாக இயக்குனர்,பாலா ஆர்த்தோ மருத்துவமனை, திருப்பூர்.
மூத்த குடிமக்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய நோய், மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்; சர்க்கரை நோய் வந்தால், தோள்பட்டை ஜவ்வு இறுக்கமடையும்.
இதுபோன்ற உடல் உபாதைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. யாரையும் சாராமல் ஓடியாடி வேலை பார்த்தவர்கள், இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படும் போது, உடல் மற்றும் மனதளவில் சோர்வடைந்து விடுவர்; தைரியம் இழந்து விடுவர்.
துவக்கத்திலேயே, மருத்துவ பரிசோதனை செய்து, சரி செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள், மூட நம்பிக்கைக்கு ஆட்படக்கூடாது. உலக சுகாதார மையம் சொல்லும் முழு ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் சமூக ஆரோக்கியத்தை உள்ளடக்கியது.
எனவே, மூத்த குடிமக்கள், மனதளவில் தைரியமாக இருந்து, தங்கள் அனுபவத்தை தங்கள் பேரக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களின் வாழ்க்கை முழுமையடையும்.