sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வயசானா என்ன... வாழ்க்கையை ரசிக்கிறோம்

/

வயசானா என்ன... வாழ்க்கையை ரசிக்கிறோம்

வயசானா என்ன... வாழ்க்கையை ரசிக்கிறோம்

வயசானா என்ன... வாழ்க்கையை ரசிக்கிறோம்


ADDED : ஆக 20, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கையை ரசிக்கலாம்இனிமையுடன் வாழலாம் கோவிந்தசாமி, 78, தெக்கலுார் :

''இன்னும் இன்பம் ஆயிரம் இருக்குது; ஏனோ மனம் தான் ஏற்க மறுக்குது; இறுக்கம் நிறைந்த மனதை திறந்து, எண்ணிப்பார்த்தால் எல்லாம் இன்பமே...''இது எனது சொந்தக்கவிதை; எனக்கு கதை, கவிதை படிப்பது, எழுதுவதில் ஆர்வமுண்டு. மூத்த குடிமக்களை பொறுத்தவரை, பலருக்கு பாதுகாப்பு வளையமாக பென்ஷன் உள்ளது; பலர், ஆயுள் வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இணை, துணை நோய்கள் என்பதும், கூடவே பயணிக்கும். முதுமையை பொருட்படுத்தாமல் உணவு பழக்கம், உடற்பயிற்சி, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது என, தங்களை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முதியவர்கள், தங்கள் குடும்பத்துடன் ஆண்டுக்கொரு முறை, சுற்றுலா சென்று வருவது நல்லது; கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க, தங்கள் பெயரில் சொத்து வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

50 வயதுக்கு மேல்தான்உற்சாகம் குறையக்கூடாது ராஜகோபாலன், 72,

தடகள வீரர், திருப்பூர்:

நான், 18 வயதில் இருந்து இதுநாள் வரை தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன். குண்டெறில், தட்டெறிதல், 100 மீ., ஓட்டம் போன்ற தடகள விளையாட்டில் பங்கேற்று வருகிறேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய 'அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அதலெடிக் அண்ட் ஸ்போர்ட்ஸ்' தலைவராக உள்ளேன். பொதுவாக, 50 வயதை கடந்து விட்டால், எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கின்றனர். அது தவறு; 50 வயதுக்கு மேல் தான் நாம் உற்சாகமாக இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மகன்களை நினைத்துபெருமிதப்படுகிறேன் புஷ்பராஜ் ஆறுமுகம், 70,

முருகம்பாளையம் :

சொந்த ஊர் துறையூர். மனைவி செல்வகுமாரியை காதல் திருமணம் செய்து கொண்டேன். இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்தனர். டிரைவராக பணிபுரிந்தேன்; மகன், மகள்களை நன்றாக கல்வி கற்க வைத்து நல்லபடியாக திருமணம் செய்து வைத்தேன்.

மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டு, 15 வருடங்களாக படுத்த படுக்கையானார். அவரை கவனிப்பதற்காக வேலையை விட வேண்டியிருந்தது. 2019ல் காலமானார். இப்போது சின்ன மகன் வீட்டில் இருக்கிறேன். காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வேன். தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது, பள்ளிக்கு அழைத்து செல்வது என சந்தோஷமாக இருக்கிறேன். வீட்டில் உள்ள சின்ன வேலைகளை திருப்தியாக செய்வது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும். வயதான காலத்தில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு என்னை அழைத்து சென்று என் மகன்கள் சந்தோஷப்படுத்துகிறார்கள். அது எனக்கு ஒரு பெரிய பரிசாக தெரிகிறது. என் மகன்களை பெற்றதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.

உழைப்பும் படிப்பும்உயர்வைத் தரும் நாகசுப்பிரமணியன், 77,

எழுதுபொருள் அங்காடி

உரிமையாளர், திருப்பூர்:

மனைவி வரலட்சுமி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் செய்து விட்டேன். அப்பாவிடம் மளிகை கடையில் வேலை செய்து சம்பளம் வாங்கிய பணத்தில் ஸ்டேஷனரி கடையை சிறியதாக துவங்கினேன்.

சீனா, ஜப்பான், தைவான், ஐரோப்பியா நாடுகளுக்கு தனியாக பயணம் செய்து சில இயந்திரங்களை முதன் முதலாக வாங்கி மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன். உழைத்தால் உயரலாம்; படித்தால் சிறக்கலாம். உழைப்பும் படிப்பும் இருந்தால் நல்ல நிலைக்கு வர முடியும். எந்த வேலையை செய்தாலும், உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும். தொழிலில் லாபம் என்பது நாம் நிர்ணயம் செய்வது இல்லை; இறைவன் உறுதி செய்வது.

நமது வேலைகளை சரியாக செய்ய வேண்டும். அதிகாலையே எழுத்து பணிகளை சீராக செய்ய முயல வேண்டும். வயது முதிர்வு என்பது எண்கள் மட்டும் தான். நாம் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது.






      Dinamalar
      Follow us