/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும் 'நிட்ஷோ' கண்காட்சி.. 'மிஸ்' பண்ணிடாதீங்க!
/
அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும் 'நிட்ஷோ' கண்காட்சி.. 'மிஸ்' பண்ணிடாதீங்க!
அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும் 'நிட்ஷோ' கண்காட்சி.. 'மிஸ்' பண்ணிடாதீங்க!
அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும் 'நிட்ஷோ' கண்காட்சி.. 'மிஸ்' பண்ணிடாதீங்க!
ADDED : ஜூலை 29, 2025 11:47 PM
திருப்பூர்; அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும், 23வது 'நிட்ஷோ' கண்காட்சி, திருப்பூரில் ஆக., 8 ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த தயாராகி வருகின்றனர்.
இந்திய பின்னலாடை உற்பத்தி தொழிலில், புதிய தொழில்நுட்பங்களை 'அப்டேட்' செய்யும் வகையில், ஆண்டு தோறும், 'நிட்ேஷா' கண்காட்சி நடத்தப்படுகிறது. உலக அளவில், அறிமுகமாகும் இயந்திரங்கள், ஒரே கூரையின் கீழ் அணிவகுப்பதால், நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தி துறையினர் பங்கேற்று, பயன்பெறுகின்றனர். காங்கயம் ரோடு, ஹவுஸிங் யூனிட் பிரிவு அருகே உள்ள, 'டாப்லைட்' வளாகத்தில், துவங்குகிறது. 3 நாள் நடக்கும் இக்கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், நேரடி செயல்விளக்க வசதியுடன் ஸ்டால் அமைக்க தயாராகிவருகின்றன.
கண்காட்சி வளாகம், ஆறு அரங்குகளில், 500 ஸ்டால்'களுடன் நடக்க உள்ளது. நிட்டிங், பிரின்டிங், தையல் இயந்திரங்கள் என, பல்வேறு புதிய இயந்திரங்கள் கண்காட்சியில் அறிமுகமாகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா உள்பட வெளிநாட்டு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், பங்கேற்கின்றன.
'நிட்ஷோ' கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:
'நிட்ஷோ' கண்காட்சி, 1.20 லட்சம் சதுரடி பரப்பிலான வளாகத்தில் நடக்க உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 470 நிறுவனங்கள் வடிவமைத்த, அதிநவீன இயந்திரங்கள் இடம்பெறுகின்றன. 'நிட்டிங்', 'எம்ப்ராய்டரி', தையல், பிரின்டிங் என, பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் துறைக்கான அனைத்து வகையிலான அதிநவீன இயந்திரங்களையும் ஓரிடத்தில், முழுமையான இயக்க நிலையில் காணமுடியும்.
பின்னலாடை உற்பத்தி இயந்திர சார்ந்த இயந்திரங்களில் ஏராளமான புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் கண்காட்சி வாயிலாக காட்சிப்படுத்த, இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். துணி உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பல, நிட்ஷோவில், புதுமையான துணி ரகங்களை காட்சிப்படுத்த தயாராக உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு, கண்காட்சி முழுமையாக 'புக்' ஆகிவிட்டது. ஆட்டோமேட்டிக் மற்றும் டிஜிட்டல் பிரின்டிங் இயந்திரங்கள், 'ஏஐ' இயந்திரங்கள், அனைத்து பிரான்டட் தையல் இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும்.
தற்போது, பல்வேறு நாடுகளுடன், இந்தியாவுக்கு வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வருகிறது. இதன்மூலமாக, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். திருப்பூர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, தொழில் விரிவாக்கத்துக்கு தயாராகி வருகிறது. இந்த தருணத்தில் நடக்கும், 'நிட்ேஷா' கண்காட்சி, ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறயைின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.