/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை 'மிஸ் பண்ணாதீங்க'
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை 'மிஸ் பண்ணாதீங்க'
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை 'மிஸ் பண்ணாதீங்க'
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை 'மிஸ் பண்ணாதீங்க'
ADDED : ஜன 02, 2026 05:39 AM
திருப்பூர்: கால அவகாசம் நெருங்குவதால், வாக்காளர்கள், பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் இருப்பின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; அடுத்த நாட்கள் நடைபெறும் இரண்டு முகாம்களை தவறவிடக்கூடாது.
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிக்கப்பட்டு, கடந்த டிச. 19ல், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போதுமுதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், சுருக்கமுறை திருத்தம், திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தீவிர திருத்தத்துக்குப்பின் வெளியான வரைவு பட்டியலில், 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர் உள்ளனர்.
ஜன. 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவங்கள் பெறப்பட்டுவருகிறது. பெயர் சேர்ப்பதற்காக, படிவம் - 6, நீக்கத்துக்கு, படிவம் - 7, அனைத்துவகையான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக படிவம் - 8, வாக்காளர்களிடமிருந்த பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது.
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியபடி, தொழிலாளர், மாணவர்கள் வசதிக்காக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழகைளில், மொத்தம் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், மாவட்டத்தின் எட்டு தொகுதிகளிலும் உள்ளன 2,822 ஓட்டுச்சாவடிகளிலும், முதல்கட்டமாக கடந்த டிச. 27, 28 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, நாளை (3ம் தேதி) மற்றும் நாளை மறுதினம், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெறும். வாக்காளர்கள், தவறாமல் முகாமில் பங்கேற்று, பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் இருப்பின், படிவம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
ஜன. 1ம் தேதி 18 வயது பூர்த்தியான இளம் வாக்காளர்கள், தகுதியிருந்தும் வரைவு பட்டியலில் இல்லாத வாக்காளர்கள், படிவம் - 6, பெயர், முகவரி, புகைப்படம், மொபைல் எண் உள்பட அனைத்து திருத்தங்களுக்கு, படிவம் - 8 பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
வரும் 18ம் தேதியுடன் சுருக்கமுறை திருத்தம் முடிகிறது. அடுத்த மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போதைய திருத்தம் மிக முக்கியமானதாக உள்ளது. இன்னும், 16 நாட்களே அவகாசம் உள்ளது.
வாக்காளர்கள், வாய்ப்பை தவற விடாமல், உடனடியாக, முகாம் வாயிலாகவோ, பி.எல்.ஓ.வை அணுகியோ, பெயர் சேர்த்தல், திருத்தம் இருப்பின் படிவம் பூர்த்தி, உரிய ஆவணங்களுடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும். https://voters.eci.gov.in/ என்கிற இணையதளம் வாயிலாக, இருப்பிடத்தில் இருந்தபடியே, வாக்காளர் பட்டியல் பெயர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக விண்ணப்பிக்கலாம்.

