/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; திருப்பூரில் 11 பேர் தேர்வு
/
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; திருப்பூரில் 11 பேர் தேர்வு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; திருப்பூரில் 11 பேர் தேர்வு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; திருப்பூரில் 11 பேர் தேர்வு
ADDED : செப் 03, 2025 11:50 PM
திருப்பூர்; தமிழக அரசின், 2024 - 2025ம் ஆண்டுக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, கணியூர், ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் அலமேலு மங்கை, கருகம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஞ்சனமாலை, குண்டடம் தாளக்கரை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ், ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் பள்ளி கணினி பயிற்றுநர் பிரியதர்ஷினி.
பூலுவப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜூ, கணக்கம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவகுமார், உடுமலை சாயப்பட்டறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை ஆனந்தி, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் ஆகிய, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நாளை, காலை, 10:00 மணிக்கு, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நடக்கும் விழாவில், விருது வழங்கப்பட உள்ளது.