/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேகத்தடை அமைக்க வேகம் காட்டலாமே'; அதிகாரியிடம் மனு
/
'வேகத்தடை அமைக்க வேகம் காட்டலாமே'; அதிகாரியிடம் மனு
'வேகத்தடை அமைக்க வேகம் காட்டலாமே'; அதிகாரியிடம் மனு
'வேகத்தடை அமைக்க வேகம் காட்டலாமே'; அதிகாரியிடம் மனு
ADDED : செப் 03, 2025 11:50 PM

பல்லடம்; சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, திருப்பூர் - பல்லடம் -- உடுமலை வரை, நெடுஞ்சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
முதல்வர் திருப்பூர் வரவில்லை. இதனையடுத்து, அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், வேகத்தடைகளை அகற்றியதில் காட்டிய வேகத்தை, அமைப்பதில் அதிகாரிகள் காட்டவில்லை. இதனால், தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருவதால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல்லடம் நெடுஞ்சாலைத்துறையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அண்ணாதுரை கூறுகையில், ''முதல்வர் வருகைக்காக ஒரே நாளில் அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. பின், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அமைக்காததால், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையில், அன்றாடம் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, போர்க்கால அடிப்படையில் வேகத்தடைகளை உடனடியாக அமைக்க வேண்டும்,'' என்றனர்.
மனுவை பெற்று கொண்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, ''வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பணிகள் முடியும்,'' என்றார்.