/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் திட்டம் ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் பணி துவக்கம்
/
கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் திட்டம் ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் பணி துவக்கம்
கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் திட்டம் ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் பணி துவக்கம்
கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் திட்டம் ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் பணி துவக்கம்
ADDED : ஏப் 02, 2025 07:16 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில், ரூ.62.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் வீடுகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
ராக்கியாபாளையம் மற்றும் புதுப்பாளையத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாகவும்; திருப்பூர் ஒன்றியம் பெருமாநல்லுார் சந்தை திடலில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், பெருமாநல்லுாரில் முதல்வர் மருந்தகம் மற்றும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்.
அதன்பின், ஊத்துக்குளி ஒன்றியம், காளிங்கராயன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டம், இலவச வீட்ட மனை பட்டா வழங்குவது, குன்னத்துார் பேரூராட்சி, செங்காளிபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாகவும்; எடையபாளையம் ஊராட்சி, ஏ.தொட்டிபாளையத்தில், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுக்குப்பின் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், 1,036 வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில், 1,956 வீடுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன; 138 வீடுகள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில், 3,505 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டங்களில் ரூ.62.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.