/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'; வடிகால் வாரியம் அறிவிப்பு
/
இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'; வடிகால் வாரியம் அறிவிப்பு
இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'; வடிகால் வாரியம் அறிவிப்பு
இன்றும், நாளையும் குடிநீர் 'கட்'; வடிகால் வாரியம் அறிவிப்பு
ADDED : நவ 14, 2024 04:11 AM
உடுமலை: திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மடத்துக்குளம், உடுமலை ஒன்றியங்களிலுள்ள, 318 ஊரக குடியிருப்புகள் மற்றும் தளி, சங்கராமநல்லுார், கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதே போல், உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 158 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய, நாற்றுப்பண்ணைக்கு, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, புதிதாக பம்பிங் ஸ்டேஷன் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக, குழாய் அமைக்கும் பணி நடப்பதால், இன்றும், நாளையும் (14 மற்றும், 15ம் தேதி) இரு நாட்கள் திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாயில் நீர் திறக்கும் பணி நிறுத்தப்பட்டு, புதிதாக குழாய் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும்.
எனவே, இரு நாட்கள் உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு, குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளனர்.

